Translate

Saturday, 14 July 2012

ஜெய்ராம் ரமேஷ் இலங்கை பயணம்

புது தில்லி, ஜூலை 11: மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை மாலையில் இலங்கைக்குப் பயணமானார்.
மூன்று நாள் பயணமாக அந்நாட்டுக்குச் சென்றுள்ளார் அவர். இந்தியாவில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் குறித்து கொழும்பில் நடைபெறும் கருத்தரங்கில் பேசுகிறார். அங்கு, லக்ஷ்மண் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் உத்திகளுக்கான கல்வி நிறுவனம் நடத்தும் கருத்தரங்கில் அந்த திட்ட அமலாக்கம் தொடர்பான தனது அனுபவங்களை ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே "வளரும் நாடுகளுக்கு இடையிலான ஆராய்ச்சி மற்றும் தகவல் பரிமாற்ற முறை' தொடர்பான உடன்படிக்கை கையெழுத்தாகவுள்ளது. அதன் பின்னர் பண்டாரநாயக சர்வதேச கல்வி நிலையத்தில் "தெற்காசியாவில் மாறி வரும் இந்தியாவின் பங்களிப்பு' குறித்து அவர் பேசுகிறார். மேலும், அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்ச, இலங்கை பொருளாதார அமைச்சர் பேசில் ராஜபட்ச, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் ஆகியோரையும் ஜெய்ராம் ரமேஷ் சந்தித்துப் பேசுவார்.

No comments:

Post a Comment