Translate

Saturday 14 July 2012

மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியின் புதிய அமைப்பு.

Posted Imageமஹிந்த ராஜபக்ச ஆட்சி குறித்து விரக்தி அடைந்துள்ள அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் இணைந்து புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்க இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதன்படி "சுது அரலிய" எனும் பெயரில் சந்திரிகாவினால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த அமைப்பை பொலனறுவை மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் முன்னெடுத்துச செயற்பட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பு உருவாக்கம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் பழைய இடதுசாரிக் கட்சிகள் பலவற்றின் உறுப்பினர்களும் கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றியுள்ளனர்.
இதேவேளை, அரசுடன் இருந்து விலகிய ஜனாதிபதி ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார புதிய கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து புதிய அரசியல் கட்சி தொடங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
18 ஆவது அரசியல் சீர்த்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.seithy.co...&language=tamil 

No comments:

Post a Comment