Translate

Monday, 30 July 2012

TNA வேட்பாளர் கைது பழிவாங்கல் செயல்! சம்பந்தன்


TNA வேட்பாளர் கைது பழிவாங்கல் செயல்! சம்பந்தன்
மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமலை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் முந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசங்கத்திற்கு ஆதரவு வழங்கியவர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

அவர், அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இரா. சம்பந்தன் எம்.பி. கூறினார்.

எனினும், இளைஞர்கள் சிலர் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதற்கு மேற்படி வேட்பாளர் உதவியிருக்கலாம் எனவும் அதை மனிதக் கடத்தல் என தான் வர்ணிக்க விரும்பவில்லை எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

'தம்மை கொடுங்கோலாட்சிக்குள்ளாக்கும் ஒரு நாட்டிலிருந்து மக்கள் தப்பிச் செல்கின்றனர். இந்நபர், அரசியல் ரீதியாக எம்மை ஆதரிக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனால் இவர் கடந்த தேர்தலில் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவை ஆதரித்தவர். கைது செய்யப்பட்டிருந்த சுமார் 30 இளைஞர்களை, பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டதன் மூலம் விடுவிக்க இவரால் முடிந்தது' எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறினார்.

No comments:

Post a Comment