கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற ஏல விற்பனை ஒன்றில் வெள்ளை பூண்டு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்த புறக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று, 50 லட்சம் ரூபா கப்பம் கோரி, 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கப்பமாக பெற்ற, வர்த்தகராக தன்னை இனங்காட்டிக் கொண்ட பாதாள உலக தலைவர் உள்ளிட்ட குழுவொன்றை கைதுசெய்ய கொட்டாஞ்சேனை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
துறைமுகத்தில், கடந்த 14 ஆம் திகதி ஏறவிற்பனை நடைபெற்றதுடன் அன்று மாலை வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். துறைமுகத்தில் நடைபெற்ற ஏல விற்பனையில் 15 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாவுக்கு, வர்த்தகர் வெள்ளை பூண்டு கொள்லனை வாங்கியுள்ளார்.
துறைமுகத்தில் நடைபெறும் ஏல விற்பனையில் எவ்வளவு பணத்தை செலுத்தி பொருட்களை கொள்வனவு செய்தாலும் அதனை கட்டாயமாக இரண்டாவது ஏல விற்பனைக்கு விட வேண்டும் எனவும் இந்த ஏல விற்பனையை நடத்துபவர்கள் பாதாள உலக வர்த்தகர்களே என தெரியவந்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பணத்தை செலுத்தி, வெள்ளை பூண்டை கொள்கலனை துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்துச் சென்றாலும் அது வர்த்தகருக்கு கிடைக்காது.
இரண்டாவது ஏல விற்பனையில் அதிக விலைக்கு கேட்கும் நபருக்கு அது வழங்கப்படும் எனவும் இதன் போது, துறைமுகத்தில் செலுத்திய பணம், துறைமுகத்தில் பொருளை கொள்வனவு செய்த வர்த்தகருக்கு கிடைப்பது, அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பாதாள உலக வர்த்தகர்கள் எடுத்துக்கொள்வர் எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
இரண்டாவது ஏல விற்பனை கொழும்பு மாளிகாவத்தை போதிராஜா மாவத்தையில் உள்ள இடம் ஒன்றில் நடைபெற்றுள்ளது. இதில் துறைமுகத்தில் வெள்ளை பூண்டை கொள்வனவு செய்த வர்த்தகர் உட்பட 15 வர்த்தகர்கள் சென்றுள்ளனர். இதில் தம்மை வர்த்தகர்கள் என இனங்காட்டிக் கொண்ட பாதாள உலகத்தினரும் இருந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது ஏல விற்பனையிலும் வெள்ளை பூண்டை துறைமுகத்தில் கொள்வனவு செய்த தமிழ் வர்த்தகரே கொள்வனவு செய்துள்ளார். துறைமுகத்தில் கொள்வனவு செய்த தொகைவிட 7.2 லட்சம் ரூபாவை அதிகமாக செலுத்தி அவர் இரண்டாவது ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். மேலதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தொகை இரண்டாவது ஏலகத்தை நடத்திய பாதாள உலக வர்த்தகர்களே பகிர்ந்து செல்லுவர்.
இந்த நிலையில், ஏலத்தில் வெள்ளை பூண்டை கொள்வனவு செய்த வர்த்தகரிடம் அப்போது கையில் 5.2 லட்சம் ரூபா மாத்திரமே இருந்துள்ளது. இதனால் மீதி பணத்தை எடுத்து வர புறக்கோட்டையில் உள்ள தனது வர்த்தக நிலையத்திற்கு அவர் முச்க்கர வண்டியில் சென்றுள்ளார். அப்போது ஆமர் வீதி காவற்துறை நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியில் சென்றவர்கள் வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளனர்.
அப்போது வர்த்தகரிடம் இருந்து 5.2 லட்சம் ரூபாவை எடுத்துக்கொண்ட கடத்தல்கார்கள், வர்த்தகரை விடுவிக்க 50 லட்சம் ரூபாவை கேட்டுள்ளனர். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி அந்த தொகையை 25 லட்சமாக குறைத்து கொண்ட வர்ததகர், ஏல விற்பனை நிலையத்தில் இருந்த வர்த்தகர் ஒருவரை தொடர்பு கொண்டு அந்த பணத்தை பேலியகொட பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வைத்து வழங்கியுள்ளார். இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட வர்த்தகர், சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வர்த்தகரை கடத்திச் சென்ற நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவற்துறையினர், ஏல விற்பனையில் இருந்த வர்த்தகர் ஒருவருக்கும் பாதாள உலகத்தினருடன் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இவர்களை கைதுசெய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவற்துறையினர் இன்று அவர்களை கைதுசெய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
http://www.globaltam...IN/article.aspx

No comments:
Post a Comment