Translate

Thursday, 16 August 2012

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்

ஏறத்தாள 2000 க்குப் பின்பு புலப்பெயர்வில் ஒரு மாற்றம் வந்தது . முன்பு புலத்தில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளை சிங்கப்பூரிலோ , தாய்லாந்திலோ போய்க் கலியாணம் செய்து புலத்திற்கு கூப்பிட்டார்கள் . பின் அது இந்தியாவாக மாறியது . 

ஆனால் இப்பொழுது புலத்து இளைஞிகளும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை புலத்தில் இருந்து நேரடியாகவே தாயகத்திற்குப் போய் கலியாணம் செய்கின்றார்கள் .அதுவும் நன்றாகப் படித்து பல்கலைக்கழகத்தில் ஓல் ஐலண்டில் முதல் 50 பேரில் தெரிவான மாப்பிள்ளை என்றால் முதலிடம் . 

மாப்பிள்ளையும் இங்கு வருகின்றார் . ஒரு சிறிது காலம் போனவுடன் அவர்களுள் அன்னியோன்னியம் குறைவதை அவதானித்திருக்கின்றேன் . வந்த மாப்பிள்ளைகளிடம் ஒருவிரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது . ஒருசிலர் தங்கள் குறைகளை என்னிடம் கொட்டியும் இருக்கிறார்கள் . 

எப்படியென்றால் , தாங்கள் வந்தவுடன் மனைவியின் ஆளுமைகள் கூடவாகவும் , தாங்கள் அடிமைபோல நடத்தப்படுவது போல உணர்வதாகவும் ஆதங்கப்பட்டார்கள் . என்னைப் பொறுத்தவரையில் புலத்துக்கு வருகின்ற பெண்ணாலும் சரி ஆணாலும் சரி ஆரம்பத்தில் புலத்து வாழ்கை முறைகளுடன் ஒத்துப்போக பல சிரமங்களை மனச்சங்கடங்களை எதிர்நோக்குகின்றார்கள் . இதில் பெண்கள் தங்களது பொறுமையினால் ஆண்கள் ஒருசிலரது அலப்பல்களை தாங்குகின்றார்கள் . ஆனால் ஆண்களோ எதிர்வினையாக தங்களது ஆணாதிக்க மனோபாவம் அவர்களது முதல் எதிரியாக நின்று தாங்கள் மனைவிமார்களின் ஆதிக்கப் போக்குக்கு அடிமையாகின்றோம் என்ற முடிவுக்கே வந்து விடுகின்றார்கள் . 

எனது கேள்வி என்னவென்றால் இப்படி இளைஞிகளோ இளைஞர்களோ  தாயகத்தில்உள்ள மாப்பிள்ளையைக் கலியாணம் கட்டுவது சந்தோசமான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா?? அல்லது இருபாலாருமே புலத்தில் தங்கள் வாழ்க்கை துணையைத் தேடுவது நல்லதா ?? எங்கே உங்கள்  கருத்துக்களைப் பதியுங்கள் . 
http://www.yarl.com/forum3/index.php?showtopic=106459

No comments:

Post a Comment