கிழக்குமாகாண தேர்தல் களத்தில் வாக்குகளை கவர அரசாங்கத்தினையும், பிக்குகளையும் சாடி பேசினார் ஹகீம். அதாவது காவியுடை தரித்த பயங்கரவாதம் என பேசினார். இதனால் மஹிந்தா அமைச்சரவை மற்றும் பிக்குகள் சங்கம் போர்க்கொடி தூக்கினர். ஹகீம் அரசில் அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பேசக்கூடாது எனவும் எனவே அவரது அமைச்சுப்பதவியினை பறிக்கவேண்டும் எனவும் கோஷமிட்டனர்.
இதனால் மிரண்டார் ரவூப் ஹகீம், உடனடியாக பிக்குகளிடம் மன்னிப்பு கோரி இன்று அறிக்கை விட்டுள்ளார். அதாவது தனது வார்த்தைகள் பிக்குகளை காயப்படுத்தி இருக்கலாம் அதற்காக தான் மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளார். அமைச்சுப்பதவி பறிபோய்விடும் என்பதற்காக பிக்குகளிடம் மன்னிப்பு கோரிய ஹகீம் எப்படி கிழக்கு மக்களிற்காக குரல் கொடுக்கப்போகின்றார்
No comments:
Post a Comment