Translate

Tuesday, 21 August 2012

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அமைச்சரவையினை மீளமைத்துள்ளது


நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அமைச்சரவையினை மீளமைத்துள்ளது

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் அமைச்சரவையின் செயற்திறன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உள்ளார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையில் அமைச்சரவை மீளமைக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.பொதுவாக உலகில் உள்ள அரசாங்கங்கள் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தமது அமைச்சரவையினை புதுப்பித்துக் கொள்வதென்பது வழமையில் காணப்படும் ஒரு நடைமுறையாகவுள்ளது. இந்நடைமுறைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விதிவிலக்கானதல்ல.அந்தவகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திறனை மேலும் செழிப்படைய வைக்கும் நோக்கில் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
இம்மாற்றங்கள் அமைச்சரவையின் தொடர்ச்சியை உறுதிபடுத்தவும் அதே வேளையில் பல புதிய உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளித்தமை மகிழ்ச்சிக்குரியதே.நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினது இலக்கினை அடைவதற்கு மீளக்கட்டமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை உறுதியாகத்தெரிவிக்க விரும்புகி றோம்.
அமைச்சரவையின் விபரங்கள் :
துணைப் பிரதமர்கள்:
-திரு உருத்திராபதி சேகர் : மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல்
-பேராசிரியர் செல்வா செல்வநாதன் : நிதித்துறை
-திருமதி சுபா சுந்தரலிங்கம் : துறைசாரா அமைச்சர் – பிரதமர் பணியகத் தலைவி
அமைச்சுக்களின் விபரங்கள் :
-திரு டிலக்சன் மொறிஸ் : இனஒழிப்பு, போர்க்குற்றங்கள் மானிடத்துக்கெதிரான
குற்றவிசாரணை-தடுப்பு
-திருமதி பாலாம்பிகை முருகதாஸ் : பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணல்
-கலாநிதி; தவேந்திர ராஜா : கல்வி, உடல்நலத்துறை
-திரு முத்துக்குமாரசுவாமி இரத்னா : ஏதிலிகள் விவகாரம்
-திரு சாம் சங்கரசிவம் : வெளியீடுகள் ஆவணக் காப்பகத்துறை
-திருமதி ரஜனி சின்னத்தம்பி : தமிழ் கலைகள் தொன்மை பேணல்
-திரு மகிந்தன் சிவசுப்பிரமணியம் : அரசியல் கைதிகள, போர்க்கைதிகள், இடம்பெயர்ந்தோர் விவகாரம்
-திரு சிவகுருநாதன் சுதர்சன் : ஊடக விவகாரம்
-செல்வி வாசுகி தங்கராஜா : அனைத்துலக விவகாரம்
-திரு தணிகாசலம் தயாபரன் : அரசியல் விவகாரம்
-திரு நிமால் விநாயகமூர்த்தி : பொருண்மிய அபிவிருத்தி;; சூழல்துறை
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

No comments:

Post a Comment