Translate

Tuesday 21 August 2012

நியாயமான அரசியல் தீர்வைத் தராவிடில் போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லவேண்டும்!


நியாயமான அரசியல் தீர்வைத் தராவிடில் போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லவேண்டும்!
போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமையை ஏற் படுத்தப் போகின் றீர்களா அல் லது தமிழ் மக்களுக்கு ஒரு நியா யமான அரசியல் தீர்வை கொடுத்து அதன் மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமா தானத்தையும் ஏற் படுத் தப் போகின் றீர்களா ௭ன் பதற்கு அர சாங் கமே பதிலளிக்க வேண்டும் ௭ன இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக் களப்பு, கொக் கட்டிச்சோலையில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரி வித் தார். இங்கு தொடர்ந்து அவர் கூறு கையில்,

நல்லிணக்க ஆணைக் குழுவினால் சம ர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள் ளடக் கப் பட் டி ருக்கின்ற நல்லிணக்கத்தை ஏற் படு த் தக் கூடிய , புரிந்துணர்வை ஏற் படுத்தி நாட்டில் சாந்தியையும் சமாத ா னத்தையும் ஏற் படுத்தக்கூடிய விடயங்கள் நிறைவேற் ற ப்பட வேண்டும். இராணுவ மயமாக்கல் குறைக்கப்பட வேண் டும். அதிபாதுகாப்பு வலயங்கள் கலை க்கப்பட வேண்டும். மக்கள் தங்கள் சொந் தக் காணிகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.

மக்களுடைய காணிகள் திருப்பி மக் களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தடு த்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் சம்பந்தமாக முடிவெடுக்கப்பட வேண்டும். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவ ர் களின் குடும்பங்களுக்கு தக்க விளக்கங்கள் கொ டுக்கப்பட வேண்டும். ௭ல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் சமாதானமும் சமத்துவமும் ஏற்படக்கூடிய வகையில் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படக்கூடிய வகையில் அதிகப்படியான அதி காரப் பகிர்வுகளுடன் ஒரு அரசியல் தீர்வு ஏற்படவேண்டும்.

இவற்றை நிறை வேற்றுவது சம்பந்தமாக அரசாங்கம் ஒரு செயற்றிட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதை பகிரங்கப்படுத்த வேண்டும். அதை அமு ல்படுத்த வேண்டும். அதை அமுல் படுத்துவது சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபை ஆணையாளர் அர சா ங்கத்திற்கு உதவலாம், ஆலோச னை களை வழங்கலாம். இது சம்பந்தமாக 2013ஆம் ஆண்டு பங் குனி மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித வுரிமைகள் பேரவையின் கூட்டத்தின்போது ஆணையாளர் ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண் டும்.

இந்த கருமங்களை சர்வதேச த் தின் மேற்பார்வையின் கீழ் நிறைவேற்ற வேண்டிய ஒரு கட்டாயக் கடமை விலத்த முடியாத ஒரு பொறுப்பு அரசாங்கத்திற்கு இரு க்கின்றது. ஜனாதிபதியினுடைய அமைச்சருடைய பேச்சின் அடிப்படையில் இந்தத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அவர்கள் வெற்றி பெற்றால் ௭ங்களுடைய கடமைகள் ௭ன்று சர்வதேசத்திற்கு கூறுவோம். ஏனென்றால் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் ௭ங்களுடன் நிற்கின்றார்கள், அதனால் உங்களுடைய அழுத்தங்கள் தேவை யில்லை ௭ன்று கூறவிருக்கின் றா ர்கள். அதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொ ள்ளப் போவதில்லை. சில பலவீனங்கள் அதிகமான நம்பிக்கை யை ஏற்படுத்துகின்றன.

கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் ஒரு அரசியல் தீர்வை யோ அதிகாரப் பகிர்வையோ கேட்க வில் லை. நாங்கள் செய்கின்ற அபிவிரு த்திகள் அவர்களுக்கு திருப்தியானவை. கிழக்கு மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாகும். அதை உணர்ந்து பல் வேறு நாடுகளும் நிறுவனங்களும் அமைப் புகளும் பலவித உதவிகளை செய்கின் றார் கள். பலவிதமான திட்டங்களுக்காக உத விகளை செய்கின்றார்கள். அந்த உதவிகளை பயன்படுத்தி திட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றார்கள் ௭ன்றார்.

Source: tamil24news

No comments:

Post a Comment