Translate

Tuesday 21 August 2012

இன்னொரு ஆயுதப்போராட்டம் வெடிக்கும் – சுமந்திரன் எச்சரிக்கை.

Posted Imageசிறிலங்காவின் கல்விமுறையில் ஏற்பட்டுள்ள குழப்பம் தீர்க்கப்படாது போனால், அது இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கு இட்டுச்செல்லும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரங்கினுள் நுழைவதற்கு முன்னரே, தமிழர்களின் எழுச்சி 1970இல் லண்டனில் தொடங்கி விட்டது.
தரப்படுத்தல் கொள்கையினால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டு, உயர்கல்விக்காக லண்டனுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அதற்காக அவர்களின் பெற்றோர் தமது சொத்துகளையெல்லாம் விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தாய்நாட்டில் நேர்ந்த அனுபவம் அவர்களுக்கு கசப்பானதாக அமைந்தது.
அது இன முரண்பாடுகள் தோன்ற அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.
ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்.
அவர் லண்டனில் உயர் கல்வியை நிறுத்தி விட்டு இராணுவப் பயிற்சி பெறுவதற்காக பலஸ்தீனத்துக்குப் போனார்.
ராஜபக்ச அரசினால், பரப்புரைகளுக்காக செலவிடப்படும் பணத்துடன் ஒப்பிடும் போது, கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீடு நகைப்புக்கிடமானது.
இசட் ஸ்கோர் பிரச்சினை மற்றும் ஏனைய கல்விப் பிரச்சினைகள் இன்னொரு மோதலுக்கான விதையாக வீழ்ந்துள்ளது.
இந்த பிரச்சினைக்கு அவசரமாக தீர்வு காணப்படாது போனால், வரலாறு மீண்டும் திரும்பும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://thaaitamil.com/?p=29462 

No comments:

Post a Comment