தமிழ், முஸ்லிம் தேசியங்கள் ஒரு போதும் ஒன்று சேராது- பஸீர் சேகுதாவூத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்தை செல்வாவின் பக்குவத்தையும் முஸ்லிம் மக்கள் மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் பக்குவத்தையும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே ஒன்று சேர மாட்டாது என கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
நேற்று மாலை 22ஆவது ஸுஹதாக்கள் தினத்தன்று காத்தான்குடி ஐக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்: இந்த 22ஆவது ஸூஹதாக்கள் ஞாபகார்த்த தினமானது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். 1956 காலப்பகுதிகளில் சிங்கள பிரதேசிய வாதம் தமிழ் மக்களை வாட்டியெடுத்த ஒரு காலப்பகுதியாகும். அந்தக் காலத்தில் தமிழ்ப் பேசுகிற சிறு குழந்தை கூட கொதித்தெழும்பும் காலம்.
இதேபோன்றுதான் 1990ஆம் ஆண்டு காலப்பகுதி தமிழ்ப் பேரினவாதம் வட-கிழக்கு முஸ்லிம்களின் உயிர்களைக் காவுகொண்ட காலப்பகுதி. தமிழ்ப்பேரினவாதம் ஒரு வகையான போராட்டத்தை மேற்கொண்ட காலம். கதவைத் தட்டி வெட்டி வீழ்த்துதல், கர்ப்பிணித்தாயின் வயிற்றைக்குடைந்து சிசுவை வெளியே எடுக்கும் கொடூரமான காலம். சுஜூது செய்து கொண்டிருந்த அப்பாவி ஜனங்களை கொன்று குவித்த காலம்.
மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் சொல்வதைப் போல மன்னிப்போம் மறக்கமாட்டோம் இவ்வாறான இதயங்களை திருடிச்சென்ற நிகழ்வுகளை மன்னிக்கலாம் ஆனால் மறக்க முடியாது.
தமிழ் தேசியமும் முஸ்லிம் தேசியமும் இணைந்து ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டுமென குரல்கொடுக்கப்படுகின்ற இக்கால கட்டத்தில் தமிழ் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒன்றிணைவதாக இருந்தால் தமிழ் தேசியமும் தமிழர்களும் முஸ்லிம்களுக்கு என்ன செய்தார்கள். முஸ்லிம் தேசியமும் முஸ்லிம் இளைஞர்களும் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை சுயவிமர்சன அடிப்படையிலே சிந்தித்து பாரம்பரிய உறவு மீட்டெடுக்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு தமிழ்ப் பேரினவாதிகளினால் செய்யப்பட்டவைகள் மன்னிக்கப்பட வேண்டும். மறக்க முடியுமானவைகளை மறந்து வாழ வேண்டும்.அதே போன்று தமிழ் மக்களுக்கு முஸ்லிம்களால் செய்யப்பட்டவைகள் மன்னிக்கப்பட வேண்டும்.
03ஆவது தேர்தல் பூட்டு என்பதனைக் கொண்டு இரு சாராரையும் ஒன்று சேர்க்க முடியாது.
எதிர்வருகின்ற செப்டெம்பர் 08ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் தீர்வு வெளியிட முன்னர் ஸ்ரீ.ல.மு.கா 100சதவீதம் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் என்று எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் படு மோசமாக எம்மை விமர்சித்திருந்தது.
எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு சுயாதீனமாக சிந்தித்து முடிவெடுக்கும் தன்மை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.
ஆகவே தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒன்றுபடுவதானது பரம்பரை இடைவெளி பற்றிய அறிவு. த.தே.கூ உறுப்பினர்கள் தலைவர்கள் ஒன்று கூடி ஒரு முடிவு எடுக்கக் கூடிய தந்தை செல்வாவின் பக்குவம் இல்லாமலிருக்கும் பட்சத்தில் சாத்தியமற்ற அம்சமாகும் என மேலும் தெரிவித்தார். ___
http://www.virakesar...asp?key_c=39825

தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை போராடுவேன்
என உறுதிமொழி எடுத்துக்கொள்ளுகிறேன்
என உறுதிமொழி எடுத்துக்கொள்ளுகிறேன்
No comments:
Post a Comment