Translate

Monday 6 August 2012

புகலிடம் கோருபவர்கள் அனைவரையும் நாடு கடத்துக! இலங்கை அரசு வேண்டுகோள்.

Posted Image
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதனால், இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்கள் அனைவரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் இலங்கையரின் எண்ணிக்கையின் காரணமாக அந்நாடுகளுக்கு சமாளிக்க முடியாத ஒரு பெரும் சவால் ஏற்பட்டிருப்பதனால் அப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண வேண்டுமாயின், அந்த அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட இலங்கையரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டுமென்று எமது அரசாங்கம் கேட்டிருப்பதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இவ்வாண்டில் அவுஸ்திரேலி யாவுக்கு சட்டவிரோதமாக சென்று அரசியல் அடைக்கலம் கோரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதென்றும் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஆதரவான சில அரசியல் சக்திகள் எங்கள் நாட்டில் உள்ள அரசியல் குழுக்களுடன் இருக்கும் தங்களின் நெருக்கமான தொடர்பை அடிப்படையாக வைத்து, இந்த ஆட் கடத்தல்களை மேற்கொண்டு வருவதை இலங்கை அரசாங்கம் இனங்கண்டுள்ள தென்றும் கூறினார்.
இவ்விதம் இலங்கையில் இருந்து ஆட்கடத்தலை மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.
இவர்கள் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு நூற்றுக்கணக்கான தமிழர்களை கடத்தி செல்ல எத்தனித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள நல்ல, பலம் வாய்ந்த எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் சக்திகளின் நிதி உதவியுடனேயே இவர்கள் இந்த ஆட்கடத்தல் நாடகத்தை மேடையேற்றி, தமிழர்கள் இலங்கையில் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற போலிப் பிரசாரத்தை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறினார்.
http://www.seithy.co...&language=tamil 

No comments:

Post a Comment