Translate

Monday, 6 August 2012

கதிர்காமக் கந்தன் குடியிருக்கும் பகுதியிலும் முழுமையான பௌத்த மயமாக்கல்.


கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பகுதியிலுள்ள தமிழர்களின் பூர்விகப் பகுதிகளில் ஒன்று கதிர்காமம்.ஓவ்வொரு ஆண்டு யூலை மாதத்திலும் கந்தனை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வழிபடும் ஒரு புனிதத்தளமாக கதிர்காமத்தை தமிழர்கள் பூஜிக்கின்றனர்.

மத வேறுபாடுகளின்றி நான்கு மதங்களின் சின்னங்கள் பதிக்கப்பட்ட ஆலயங்கள் இருந்தாலும், பௌத்தத்தின் ஆதிக்கமே மிகவும் கூடுதலாக காணக் கூடியதாக உள்ளது. கந்தபெருமானை சுமந்து கொண்டு யானையின் முன்னால் பௌத்த சின்னம் மாத்திரமே உலாவருகிறது.

அதுமாத்திரமல்ல, கதிர்காமத்தின் நுழைவாயின் முன்பகுதியில் சிங்கள மொழியில் தான் எழுதப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

சம அந்தஸ்த்து உள்ள நாடு சிறீலங்கா என பெரும்பான்மை ஆட்சியாளர்களினால் தெரிவிக்கப்பட்டாலும், களத்தில் நடைபெறும் காட்சிகள் முற்றிலும் மாறுபட்டது. கந்தபெருமானிடம் குறைகளைத் தீர்க்கவென வழங்கப்படும் அடையாளங்களை இன்று சிங்களப் பெரும்பான்மை மதகுருவிடம் கையளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சமய அனுஸ்டானங்களில் இந்து மதத் தலைவர்களே ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று இந்துக்களை கண்டுபிடிப்பதே பெரும்பாடாக மாறியுள்ளது கதிர்காமத் திருத்தளம்.

குமரன் கடியிருக்கும் இடத்தைத் தேடி புத்தபெருமான் சென்றுள்ளார். மலையின் உச்சியில் பெரும் பௌத்த விகாரையை அமைத்து பௌத்த தளமாக மாறிக் கொண்டிருக்கிறது கதிர்காமம். இங்கு நடைபெறும் அனைத்து சமய சம்புர்தாயங்களும் சிங்களத்திலேயே நடைபெறுகிறது.

இன்று ஐந்து வருடங்களில் கதிர்மாமம் என்ற திருத்தளமே இல்லாத நிலைக்கு இன்று பௌத்த ஆதிக்கம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழர்களின் ஆதிவாசிகளான விஸ்வ குல வேடர்களின் இடமாக இருந்த பகுதி இன்று சிங்களவர்களின் இடமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதி தமிழர் வாழ்ந்த இடம் அனைத்தும் சிங்களப் பெயர்கள் பொறிக்கப்பட்டு காணப்படுகிறது.

எனவே, சிங்கள ஆதிக்கம் கொண்ட பெரும்பான்மையினரிலிருந்து மீண்டெழுவதென்பது மனிதர்களின் கையில் இல்லை. கந்தபெருமான் தான் அவரின் நாமத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
http://thaaitamil.co...-கந்தன்-குடியி/ 
ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

http://thaaitamil.com/

No comments:

Post a Comment