Translate

Friday, 24 August 2012

புதுக்குடியிருப்பில் மாணவிகளுக்கு தொலைபேசி இலக்கம் கொடுக்கும் இராணுவம்! பெற்றோர்கள் கவலை


புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மாலை நேர வகுப்பிற்கு செல்லும் மாணவியருக்கு கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கும் இராணுவத்தினரின் அடாவடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மாணவிகள் பேருந்தில் செல்கின்ற போது இராணுவத்தினர் கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கின்றனர்.

இராணுவ சீருடையில் பேருந்தில் ஏறும் இவர்கள், ஏற்கானவே பெண்களிடம் கொடுப்பதற்காக சிறு சிறு துண்டுகளில் தமது தொலைபேசி இலக்கங்களை எழுதி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தில் பயணிக்கும் பெண்கள் மற்றும் மாணவியருக்கு அருகில் விரும்பி சென்று நிற்கும் இராணுவத்தினர், அவர்களிடம் வலிய பேச்சைத் தொடங்குவதாகவும் சில வேளைகளில் கை, கால்களினால் சுரண்டுவதாகவும் இறங்கும் போது தாங்கள் ஏற்கனவே எழுதி வைத்திருந்த கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்து விட்டு செல்வதாக பயணிகள் முறைப்பாடு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அடாவடித் தனங்களில் ஈடுபடும் இராணுவத்தினர் தொடர்பாக யாரிடம் சென்று முறையிட முடியும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் தாம் எந்தவிதமான பிரச்சனைகளுக் இல்லாமல் வாழ்ந்து வந்ததாகவும் எந்த இரவிலும் பெண்கள் தனியாக நடமாடக் கூடிய சூழ்நிலை நிலவியதாகவும் ஆனால் தற்போது தமது பிள்ளைகள் ஒரு இடத்திற்கு தனியாக செல்ல முடியாத நிலையில் தமது பிள்ளைகள் வாழ்ந்து வருவதாக பெற்றோர்கள் கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment