.jpg)
புலம்பெயர் தமிழர்களினால் இயக்கப்படும் தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த 'சமகால அரசியல் நிலைமைகள்' குறித்த செவ்வியொன்று தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து தான் நான்காம் மாடிக்குச் சென்றதாகவும் அங்கு சுமார் 3 மணித்தியாலங்கள் வரை தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
புலம்பெயர் தமிழர்களினால் இயக்கப்படும் தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் அவ்விடயங்கள் இலங்கையின் இறையாண்மையினை பாதிப்பவையாக அமைந்துள்ளன எனவும் தன்னிடம் விசாரணை நடத்தியவர்கள் குறிப்பிட்டதாக சிறிதரன் எம்.பி குறிப்பிட்டார்.
இதன்போது தன்னை ஒரு விடுதலைப் புலி உறுப்பினராகவும் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவிகள் செய்பவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் பல்வேறு கோணங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன என்றும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment