Translate

Thursday, 13 September 2012

ஜீ.எல்.பீரிஸ் நாட்டுக்கு தவறான தகவல்களை வழங்குபவராக மாறியுள்ளார் - வசந்த பண்டார


கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம், முஸ்லிம் காங்கிரஸை இணைப்பது ஆபத்தானது:-

ஜீ.எல்.பீரிஸ் நாட்டுக்கு தவறான தகவல்களை வழங்குபவராக மாறியுள்ளார் - வசந்த பண்டார
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம், முஸ்லிம் காங்கிரஸை இணைப்பது ஆபத்தானது:-
 கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம், முஸ்லிம் காங்கிரஸை இணைத்து கொள்ள நடவடிக்கை எடுக்குமானால் ஆபத்தானது. அத்துடன் அது பலனளிக்க கூடியதுமான நடவடிக்கை ஆக அமையாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

 
முழு நாட்டுக்கும் எதிராகவும் பிரிவினைவாத யோசனைகள் பலவற்றை நிறைவேற்றி கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வரும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அவர்களுடன் இணைவது நிச்சயமானது என தேசியப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
 
முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் பதவி, சிறப்புரிமை ஆகியவற்றை எதிர்பார்த்தே செயற்பட்டு வந்துள்ளது எனவும் ஆளுநரின் அனுமதி கிடைத்திருந்தால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கில் ஆட்சியமைப்பதில் எந்த தடையுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 
பதவி, சிறப்புரிமைகளை வழங்குவதன் மூலம் அரசாங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டணிக்கு செல்ல முடியும். எனினும் ஒரு தீர்மானகரமான கட்டத்தில் அந்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கட்டாயம் இணையும். வடமாகாண சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இது நடக்கும். இவர்களின் தேவை வடக்கு கிழக்கை இணைப்பதாகும். அதுவரை இவர்கள் அரசாங்கத்துடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
 
இதன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அவர்களின் அதிகார திட்டத்தை மேற்கொள்வதற்கு தேவையான யோசனைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.  இதனால் அரசாங்கம் வரப்பிரசாதங்களை வழங்கி முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்குமாயின் அது ஆபத்தானது என்பதுடன் அது பலன் தரும் நடவடிக்கையாகவும் இருக்காது. 
 
இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸிக்கு மேலும் மேலும் பலமே கிடைக்கும்.  இதனால் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கூட்டணியாக கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது என தீர்மானிக்குமாயின் அது தந்திரோபாயமான வகையில் தவறான தீர்மானமாகும். 
 
எதிர்க்கட்சிகளுக்கு பெருபான்மை இருந்தாலும் ஆளுநரின் விருப்பதற்கு அமைய தனியாக அதிக ஆசனங்களை கொண்ட கட்சிக்கு ஆட்சியமைக்க முடியும். பிரிவினைவாத யோசனை ஒன்று சபையில் சமர்பிக்கப்படும் நாளில் மாத்திரமே மாகாண சபையின் ஆட்சி நிர்வாகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
 
அப்படியான சந்தர்ப்பத்தில், முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைவது நிச்சயம். இதனை தோற்கடிக்க அரசாங்கம், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டியது அவசியமானது.  பிரிவினைவாத யோசனை ஒன்று முன் வைக்கப்படும் போது, ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவு கிடைக்குமேயன்றி, முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது. அது பலன் தரும் முயற்சியும் அல்ல என வசந்த பண்டார தெரிவித்துள்ளார். 
 
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாட்டுக்கு தவறான தகவல்களை வழங்குபவராக மாறியுள்ளார் - வசந்த பண்டார 
 
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாட்டுக்கு தவறான தகவல்களை வழங்குபவராக மாறியுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பீரிஸ், 14 ஆம் திகதி இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தொழிற்நுட்ப அதிகாரிகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே இந்த அதிகாரிகள் இலங்கை வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
 
எனினும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பா அறிக்கை ஒன்றை வழங்குவதற்கான விடயங்களை ஆராயும் நோக்கிலேயே அவர்கள் இலங்கை வருகின்றனர்.
 
இந்த அதிகாரிகள் குழுவின் அறிக்கையை பயன்படுத்தி இலங்கை தொடர்பாக விசாரணை நடத்த குழுவொன்றை நியமிக்க கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment