Translate

Saturday 15 September 2012

இலங்கை நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த அமெரிக்கா வலியுறுத்தல்


கொழும்பு: நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, விரைந்து செயல்படுத்தும் படி, இலங்கை அரசை, அமெரிக்கா வற்புறுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, தமிழர் பகுதிகளில் மறுசீரமைப்புத் திட்டங்களை அமல்படுத்த, நல்லிணக்க ஆணைக்குழு, அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை தட்டிக்கழிக்காமல், விரைந்து செயல்படுத்த வேண்டும் என, கடந்த மார்ச் மாதம், ஐ.நா.,மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.இதற்கிடையே, இலங்கைக்கு தொழில் நுட்ப ரீதியான உதவிகளை வழங்குவது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக், தலைமையிலான குழுவினர் கொழும்பு வந்துள்ளனர். 



இது குறித்து ராபர்ட் பிளேக் கூறியதாவது:

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டியது இலங்கை அரசின் கடமை. இலங்கையின், வட மாகாணத்தில், ராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைத்து, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். கூடுமானவரை இந்த மாகாணத்தில் விரைந்து தேர்தலை நடத்தி உரிய அதிகாரங்களை அளிக்க வேண்டும்.இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.

தமிழர் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியிருப்பதாலும், குடிபெயர்ந்தவர்களின் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டியிருப்பதாலும், வட மாகாணத்தில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் தேர்தல் நடத்த முடியும் என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment