Translate

Saturday, 15 September 2012

இலங்கையின் உண்மையான நட்பு நாடு பாகிஸ்தான் என்கிறார் ராஜபக்சே

கொழும்பு நகரில் நடைபெறும் காமன்வெல்த் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானில் இருந்து 22 எம்.பி.க்கள் இலங்கை சென்றுள்ளனர். 


அதிபர் மாளிகையில் நேற்று பாகிஸ்தான் எம்.பி.க் களைச் சந்தித்து பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே,  இலங்கையின் உண்மையான நட்பு நாடு பாகிஸ்தான் என்றும், அந்நாட்டு மக்கள் மீது தமக்கு எப்போதும் ஆழமான அன்பு உள்ளது என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் தெளிவான புரிந்துணர்வு இருப்பதால், இருநாடுகளும் பிராந்திய அளவில் நெருங்கி செயல்பட வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment