Translate

Friday, 7 September 2012

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் ,தாக்கி விரட்டுவதும் - இந்திய இலங்கை கூட்டுப் போர் பயிற்சி என்று உங்களுக்குத் தெரியுமா..?! ஈழதேசம் பார்வையில்..!

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் ,தாக்கி விரட்டுவதும் - இந்திய இலங்கை கூட்டுப் போர் பயிற்சி என்று உங்களுக்குத் தெரியுமா..?!  ஈழதேசம் பார்வையில்..! 
பத்து வருடங்களாக கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை கொன்று அழிப்பது மற்றும் தாக்கி விரட்டி அடிப்பது என்பது தற்செயலான விசயம் அல்ல, கடந்த பத்து வருடங்களாக, பா.ஜ.க., ஆட்சியில் அமர்ந்த பொழுதுதான்   இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்குவது என்று தொடங்கி மெல்ல மெல்ல கொல்வதற்கும் அவர்களின் மீன் பிடி கருவிகள் மற்றும் படகுகள் போன்றவற்றை சேதப்படுத்துவது, பிடித்த மீன்களை மீண்டும் கடலில் கொட்டுவது, எஞ்சிய  
மீன்களை கொள்ளை அடித்துக்கொண்டு போவது என்று தொடங்கினார்கள்.


இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் ஆரம்பித்த 2006 முதல் 2009 மே மாதம் வரை நீக்கு போக்காக இருந்த தமிழர்கள் மீதான தாக்குதல்கள், 2009 - ஜூன் மாதத்திற்குப் பிறகு உக்கிரமாகி இருக்கிறது ஏன் என்று தெரியுமா உங்களுக்கு..? மீண்டும் விடுதலைப் புலிகள் கடல்வழியே வந்து தங்களது அமைப்பை கட்டி விடுவார்கள் என்று சொன்னார்கள், கொஞ்ச காலம் ஓகோ...இது கூட உண்மையாக இருக்குமோ என்று தான் பலர் கருதினார்கள். ஆனால் காற்றுப்போன பலூன் போல ஆகிவிட்டன இந்த  காரணமும் தற்பொழுது. 

இலங்கை கடற்கரை பகுதி உள்ள நாகை , வேதாரானியம் தொடங்கி மண்டபம் தனுஸ்கோடி வரையிலான சுமார் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் கடற்கரை பகுதியில் இருந்து தமிழக மீனவர்களை அப்புறப்படுத்துவது என்பது இந்திய அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் வகுக்கப்பட்ட திட்டம்  என்று உங்களுக்குத் தெரியுமா..? எடுத்துக்காட்டாக, ஒரு சில சம்பவங்களை பார்ப்போம். மார்ச் - ஏப்ரல் மாதத்தில் இலங்கை - இந்திய - அமெரிக்க கப்பற்படை கூட்டுப்பயிற்சி நடந்தன. அதற்கு சில மாதங்கள் கழித்து இந்திய - இலங்கை கடற்படை கூட்டுப்பயிற்சி நடைபெற்றன. இந்த கூட்டுப் பயிற்சி கடற் கொள்ளைகளை தடுக்கவும், எவ்வாறு கடற்கொள்ளைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுவது என்ற ஒத்திகைதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் கடற்கொள்ளைக்கு எதற்கு இவ்வளவு பிரம்மாண்ட    கடல் போர் ஒத்திகை..? 


ஆசிய மற்றும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் இதுவரை ஒரு கடற் கொள்ளை சம்பவங்கள் நடைபெறவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். ஆப்பிரிக்கா கடற் பகுதியில் தான் பெரும்பாலும் 95 % சதவீத கடற் கொள்ளை மற்றும் சரக்கு கப்பல் கடத்துதல் போன்றவைகள் நடைபெறுகின்றன. அதுவும் கடத்தல்காரர்கள்  கேட்ட பணத்தை ஒழுங்காக கொடுத்து விட்டால் ஆப்பிரிக்கா மாடல் விருந்து வைத்து, விட்டு விடுகிறார்கள் மிகப்பத்திரமாக. என்ற நிலையில், ஆயிரக்கணக்கான   கோடிகளில் ஏன் இந்த கடற் போர் ஒத்திகை..? அதுவும் இந்திய - இலங்கை கடற் பகுதிகளில்..? என்ற விசயங்கள் தி.மு.க.வின் கருணாநிதிக்கு மிக நன்றாக தெரியும். ஜெ.அம்மையாருக்கும் தெரியும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே இந்த கொள்கை முடிவுகளை எடுக்கிறார்கள். இந்த இரண்டு பெரிய தேசியக் கட்சிகளை இணங்க வைக்கின்றன இந்தியப் பிரதமரின் தேசிய ஆலோசகர் துறை. இந்த திட்டம் இந்திய அரசின் பரம ரகசியங்களுள் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன. 


இலங்கையில் இருந்து, தமிழகதிற்கு வரும் இலங்கையர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்றும், ராணுவ வீரர்களை வேண்டுமானால் போர் பயிற்சி அளிக்காமல் திருப்பி அனுப்பலாம் என்ற கருணாநிதியின் யோசனையும், இலங்கை கால்பந்தாட்ட குழுவினரை திருப்பி அனுப்பியதற்கு கண்டனத்தையும் தெரிவித்த மு.கருணாநிதி அவர்கள், கால்பந்தாட்ட குழுவினரை திருப்பி அனுப்பியதால் தான் இந்த இலங்கை சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் படி  தமிழ் தேசிய சக்திகள் களத்தில் குதித்தன, அல்லது ஜெ அம்மையாரின் இந்த முடிவே, இலங்கை சுற்றுலாப் பயணிகளை துரத்துவதற்கு தூண்டுதலாக அமைந்தன என்றார். இதன் விளைவாக, மத்திய அரசை அதாவது காங்கிரஸ் அரசை அல்ல, இந்திய அரசின் வெளியுறவுத் துறையை குஷிப்படுத்தும் விதமாக  மகிந்தா ராஜபக்சே இந்தியாவிற்கு வரலாம், இதில் தி.மு.க.விற்கு ஒன்றும்  மாற்றுக் கொள்கை கிடையாது என்றார்.  


இலங்கை சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பிய பெ.மணியரசன் அமைப்பு மற்றும் சீமான் அமைப்பு மற்றும் பிற தமிழ்  தேசிய அமைப்புகளை கண்டித்துள்ளார் திரு.மு.க,( விடுதலை சிறுத்தைகள் தவிர..) இவ்வாறு. தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கை என்றும் இந்த அமைப்புகளிடம் இருந்து தி. மு.க. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார். 


நேற்று வேதாராண்யம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 120 பேர் 29  படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்த அல்ல அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த இலங்கை கடற்படை இவர்களின் படகுகளுக்கு வந்து, இரும்புக் கம்பி மற்றும் உருட்டுக் கட்டையால் தாக்கி, இம்முறை ஒருவர் முதுகில் கம்பியால் ' இலங்கை கடற் படை  ' என்று முத்திரையை போட்டு விட்டு, அடித்து துவைத்து விரட்டியுள்ளார்கள். இவை நேற்று நடந்த சம்பவம். 


ஆனால் இந்த மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையே கூறாமல், கண்டிக்காமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ( மார்க்சிஸ்ட் ) பொதுச் செயலர் பிரகாஷ் கரத் மதுரையில் பேட்டி அளிக்கிறார். இலங்கை மக்களை தாக்குவது, திருப்பி அனுப்புவது போன்ற செயல்களை ஏற்க முடியாது என்றார். நட்புடன் பழக வேண்டும் என்கிறார். ஆனால் சிங்கள ராணுவத்தால் மீனவன் தாக்கப்படுவதை ஆதரிக்கிறார். ஆக, தேசிய கட்சிகளும் அந்த தேசியக் கட்சியின் அரசில் அங்கம் வகிக்கும் அணைத்து  பிராந்திய கட்சிகள் அல்லது மாநில கட்சிகள் அனைத்துமே இந்திய வெளியுறவுத் துறையின் அறிவுரைக்கு கட்டுப்படுகிறார்கள். அவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் செவி சாய்க்கிறார்கள். 


ஏற்கனவே இந்திய ஆளும் அரசுக்கு தமிழர் என்றாலே உள்ளங்காலில் இருந்து உச்சி முடி வரை ஒரு வேக்காடு இருக்கும், எனவே தான் இவர்கள் போட்டு வைத்திருக்கும் பரம ரகசிய திட்டத்திற்கு இலங்கை கடற்பகுதியை பயன்படுத்தமால், தமிழக மீனவர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும், தமிழக கடற்பகுதியை சுவீகரிக்க திட்டம் போட்டுள்ளார்கள். ஜார்கண்ட் மாநிலத்தையே 'போஸ்கோ நிறுவனத்திற்கு கொடுத்து விட்டத்தைப்போல, தமிழக கடற்பகுதியை யாருக்கு மொத்தமாக விற்று விட்டார்கள் என்று தெரியவில்லை. 


எனவே தான் அவசர அவசரமாக இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். 450 இலங்கை ராணுவத்திற்கு என்று சொல்வது வரும் மாதங்களில் இந்திய வர உள்ள லிஸ்ட் ஆக இருக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கில் பயிற்சி கொடுத்திருப்பார்கள்..? நான்கு ஆண்டு காலம் போரில் ஈடுபட்ட ஒரு நாட்டின் ராணுவத்திற்கு மற்றொரு நாட்டில் ராணுவ பயிற்சி கொடுக்கும் விந்தையை இங்கு தான் நாம் காண முடியும்..? பயிற்சியே போருக்கு என்ற விதியை மாற்றி போரில் ஈடுபட்ட ராணுவத்திற்கு ஓய்வு கொடுக்காமல் தீவிர பயிற்சி கொடுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? லட்சக்கணக்கில் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வரும் மீனவனை அடித்துக் கொல்வதற்கும், விரட்டி அடிப்பதற்கு தவிர வேறு என்னவாக இருக்க முடியும்..? 


எனவே தான் சுபிரமனிய சுவாமி கூறுகிறார். இந்த திருப்பி அனுப்பும் சம்பவங்கள் நடந்தால் தமிழக அரசை அதாவது ஜெ. அம்மையார் அரசை கலைக்க வேண்டும் என்று. மற்ற அனைவரும் கூறுவது போல தமிழர் விரோத நடவடிக்கை மட்டும் என்று சுருக்கிப் பார்ப்பதால் முழுமையான காரணங்களை கண்டு அறிய முடியாது என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.


மாயாண்டிக்கருப்பு  
 

No comments:

Post a Comment