Translate

Saturday 15 September 2012

போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் அமெரிக்கத் தீர்மானத்தைத் தோற்கடிக்க மகிந்த அரசு தீவிர முயற்சி


சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற, அனைத்துலக மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆதரவு திரட்டி வருகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இணைந்து கடந்த 7ம் நாள் இந்த பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதும் அதற்குப் பின்னரும் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் ஏனைய மனிதஉரிமை மீறல்கள் குறித்தும் சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஐ.நா உருவாக்க வேண்டும் என்று அந்தப் பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஊடகசுதந்திரம் மற்றும் மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பது, முன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வு உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்துலக தலையீட்டை இது வலியுறுத்துகிறது.
அத்துடன் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மூலம் அரசியல்தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பிரேரணையைத் தோற்கடிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள சிறிலங்கா ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாரட்ண அமுனுகம, இந்தப் பிரேரணைரயைத் தோற்கடிக்க சிறிலங்கா ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
http://thaaitamil.com/?p=32173 
ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

http://thaaitamil.com/

No comments:

Post a Comment