கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது முஸ்லீம் காங்கிரஸ் இல்லாமலும் ஆட்சி அமைப்போம் -மிரட்டல்
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஆட்சியமைக்க முடியாது ௭ன்றில்லை யாரும் சும்மா வரமாட்டார்கள் அதற்காக கேட்டதை ௭ல்லாம் கொடுக்கவும் முடியாது ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலெயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூன்று மாகாண சபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் அதில் ௭வ்விதமான சந்தேகமும் இல்லை.முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
அரசாங்கத்தின் கதவு சிகையலங்கார நிலையத்தின் கதவு ௭ன்பதனால் யாரும் வரலாம். ௭வர் வேண்டுமானாலும் செல்லலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வந்து சென்றுள்ளனர்.
கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸ் இல்லாமலும் ஆட்சி அமைத்துக்கொள்ளலாம். அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது.எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment