கிழக்கு எப்போதும் திருப்பங்களையும் சர்ச்சைகளையும் தந்த பிரதேசம். நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலும் சர்ச்சை நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஏனைய மாகாணங்களில் தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட கையோடு சர்ச்சைகளும் ஓட்டங்களும் ஓய்ந்து விட்டன.
ஆனால் கிழக்கில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரத்தை எட்டும் நிலையிலும் சர்ச்சைகளும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் ஓட்டமும் ஓய்ந்து விடவில்லை. 5கோடியும் பல்வேறு சலுகைகளும் தருகிறோம். ஆளும் கட்சிக்கு ஆதரவளியுங்கள் என கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களையும் கோரப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் வாக்கு எண்ணும் மோசடி நடந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்தி நிற்கிறது.................. read more
No comments:
Post a Comment