Translate

Wednesday, 12 September 2012

ஆட்சி அமைக்க கிழக்கில் தயார்; ஆளுநருக்கு ஐ.ம.சு.மு. கடிதம்

ஆட்சி அமைக்க கிழக்கில் தயார்; ஆளுநருக்கு ஐ.ம.சு.மு. கடிதம்
news
 கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கான தயார் நிலையில் தாங்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிரடியாக அறிவித்திருக்கிறது.

 
மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரமவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சி என்ற வகையில் இந்தக் கடிதத்தை அனுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தேசிய சுதந்திர முன்னணியும் கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மாகாணசபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலைத் தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் முதலமைச்சர் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
கிழக்கு மாகாணசபையில் கூட்டாட்சி ஒன்றை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment