Translate

Tuesday, 11 September 2012

அரசுடன் இருந்து கொண்டு கூட்டமைப்புடன் இணைவதா?

ஆராய வேண்டும் என்கிறார் மு.கா. பிரதித் தலைவர்

மத்திய அரசில் இருந்துகொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் முடிபு எடுப்பதென்பது சாத்தியமற்ற தாகவே இருக்கும். எவ்வாறாயினும் உறுதியான முடிபுடனேயே நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலை வரான காபீஸ் நUர் அகமர் சயினுலாப்தீன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கிழக்கு மாகாணம் முஸ்லிம் முதலமைச் சர் ஒருவரைக் கொண்ட முஸ்லிம் மாகாண மாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இலங்கையின் ஏனைய 7 மாகாணங்களும் சிங்களவர்களினதும்,வட மாகாணம் தமிழர்களுக்கானது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணம் முஸ் லிம் முதலமைச்சரைக் கொண்ட மாகாண மாக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர் பார்ப்பாகும். கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் இணைந்து ஆட்சியமைப்பது என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகியே அதனைச் செய்தாக வேண்டும். எப்படியியிருந்தாலும் உறுதியான முடிபுடனேயே நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.


எவ்வாறானாலும் புதன்கிழமைக்கு முன் னர் முடிபு எடுக்க வேண்டிய தேவை இருக் கிறது. மட்டக்களப்பில் கல்குடா தொகுதி அரசியல் வாதிகளின் அடாவடித்தனம் காரணமாக கல் குடா தொகுதிக்கு சிறிலங்கா முஸ்லிம் காங் கிரஸுக்கு கிடைக்க வேண்டிய ஒரு உறுப்பினர் இல்லாது போயுள்ளது.அதனைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன். பிரதேசவாதம் கடந்த ஒரு அரசியலை செய்யவுள்ளேன்.இத் தேர்தலில் எமக்கு ஆத ரவு தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ் லிம், தமிழ் மக்களுக்கு மிகுந்த நன்றி களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சேவை தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி மேற்கொள் ளப்படும் எனவும் தெரிவித் தார்.

No comments:

Post a Comment