Translate

Tuesday, 11 September 2012

கிழக்கின் ஆட்சியைப் பெற முதலமைச்சர் பதவியை வழங்கலாம்


கிழக்கின் ஆட்சியைப் பெற முதலமைச்சர் பதவியை வழங்கலாம் முன்னாள் முதலமைச்சர் சுட்டிக்காட்டு

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை பலத்தை கைப்பற்ற அரசாங்கம் தவறியுள்ள தால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதல் அமைச்சர் பதவியை வழங்கி அந்தக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் தனக்கு ஆட் சேபம் இல்லையயன முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுச் சென்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட் டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நிறுத்திய வேட்பாளர்களில் 8 பேரும் தோல்வியடைந் துள்ளனர். பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் மாத்தி ரமே வெற்றிபெற்றுள்ளனர். பிரதி அமைச்சர் கருணாவின் சகோதரி ஞானபிரகாசம் ருத்ரமல ரும் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

No comments:

Post a Comment