Translate

Tuesday, 11 September 2012

கிழக்கிலும் நாமே ஆட்சி!

கிழக்கிலும் நாமே ஆட்சி!

ஜனாதிபதி தெரிவிப்பு 2005ஆம் ஆண்டு முதல் தமது தலைமை யில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முகம் கொடுத்த 10ஆவது தேர்தலான மாகாண சபைத் தேர்தலிலும் வெற்றிப் பெற்றுள்ளதாக ஜனாதி பதி மகிந்த ராஜபக்­ தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் கருத்துக் கணிப்பாக இடம் பெற்ற மூன்று மாகாண சபைகளுக்குமான தேர் தலில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் கருத் துக்கள் தொடர்பில் முழுமையான தெளிவுப்படுத்தல் ஒன்று வெளியாகியுள்ளது என்றார். மேலும் கிழக்கிலும் எமது கட்சி ஆட்சி யமைக்க கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு எனவும், 


ஜனநாயகத்தை பலப்படுத்தி அபிவிருத்தி பணிகளை முன்கொண்டு செல் வதற்கு இந்த பெறுபேறுகள் மேலும் உதவும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.இதேவேளை இந்த முறை மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கம் பெற்ற வெற்றி இலங்கைக்கு எதிராக விரல் நீட்டும் சர்வதேச தரப்பினருக்கு வழங்கப்பட்ட பதி லாக இருக்கும் என்று இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment