Translate

Saturday 8 September 2012

பிரிட்டனில் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியல் வெளியீடு


பிரிட்டனில் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளாக எட்டு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் பெயர்களைக் காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்கள் சிப்ரஸ் தீவில் ஒளிந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சிப்ரஸ் நாட்டுடன் பிரிட்டனுக்கு “குற்றவாளிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் ஒப்பந்தம்” எதுவும் கிடையாது என்பதால் சிப்ரஸ் இவர்களை வெளியேற்ற வேண்டிய அவசியமோ, அவசரமோ கிடையாது.

இவர்கள் போதைக்கடத்தல், காரில் மோதி கொன்று விட்டு ஓடிவிடுதல், தொடர்ந்த பல பாலியல் வன்முறைக் கொடுமை போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இதில் 50 வயது நிரம்பிய மார்ட்டின் ஈவான்ஸ் என்ற விருது பெற்ற தொழிலதிபர் 39 மில்லியன் யூரோ மதிப்பில் பெரியளவில் போதைக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இத்துடன் நெருப்புக்கோழி பண்ணை வைத்தால் நல்ல இலாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி பல மில்லியன் பவுண்டுகளை முதலீட்டாளரிடம் இருந்து கொள்ளையடித்துள்ளார். இவர் பிரிட்டனை விட்டு ஓடிஒளிந்து ஒரு வருடமாகிவிட்டது.
பால் லாக்வுட்(41) என்பவன் 6 வயது சிறுமி உட்பட ஐந்து பாலியல் பலாத்காரக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளான்.
வேய்ன் ஸ்மித்(37), தன் நண்பனுடன் கார் வேகப்போட்டி நடத்தியதில் ஒரு பாதசாரியின் மீது காரை ஏற்றிக் கொன்று விட்டுத் தப்பி விட்டான். இவன் சிப்ரஸில் குடியுரிமை பெற முயன்று வருகிறான். இவனுடன் இவனது காதலி ஆன் ஸ்கெல்டிங்கும் இருக்கிறாள்.
46 வயது மார்ட்டின் பவர், ஏழு மில்லியன் பவுண்டு அடமான ஊழலில் நகர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறான்.
தைமூர் மெஹ்மூத், சேம்ப்சன், ஹாசன் அகார்கோ, மெஹ்மூத் சாலிகு ஆகியோரும் போதைபொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களாவர்.
இவர்களை கைது செய்வதற்கான முயற்சியில் பிரிட்டன் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment