இலங்கை தொடர்பான தேசியக்கொள்கையை ஜெயலலிதா தலைமையிலான அரசு மீறினால், தமிழகத்தில் ஆட்சிக்கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டியில்,"இலங்கை அரசுடனான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடுவதை நிறுத்துமாறு மத்திய அரசு,அரசியல் சாசனத்தின் 256 வது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தமிழகம் வரும் சிங்களர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
இந்த உத்தரவை பின்பற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தவறி, இந்திய தேசியக்கொள்கையை எதிர்காலத்தில் மீறினால்,தமிழகத்தின் ஆட்சிக்கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
இந்திய தேசிய கொள்கையில் தலையிடுவதை தமிழக அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.அத்துடன் தமிழகத்துக்கு வரும் சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
மத்திய பிரதேசத்திற்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவரை கைதுசெய்ய வேண்டும்” என்றார்.
http://www.tamillead...7-07-05-51.html
No comments:
Post a Comment