இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரசுத் தலைவர்கள் மகாநாட்டில் கலந்து கொள்ளாது புறக்கணிக்கக்கூடுமென்ற எச்சரிக்கையைக் கைவிடுமாறு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா கனடாவிடம் கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு மேற்கொண்ட ஐந்து நாள் பயணத்தின் நிறைவு நாளாகிய இன்று, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கருத்து வெளியிட்டார்.
அடுத்த ஆண்டு நொவம்பரில் இலங்கையில் இடம்பெறவுள்ள அரசுத் தலைவர்களின் மகாநாட்டில் பொதுநலவாய நாடுகள் அனைத்தும் கலந்கொள்ளவேண்டுமென அனைத்துத் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக அறிவதாகவும், பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமெனவும், கனடா உச்சி மகாநாட்டில் பங்கு பற்றுமெனவும் நம்பிக்கை கொண்டுள்ளதாக கமலேஷ் ஷர்மா தெரிவித்தார்.
போரின் இறுதிக் கட்டத்தில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மகாநாட்டைப் புறக்கணிக்கவுள்ளதாக கனேடிய பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர் வலியுறுத்தியுள்ளார்.
http://thamilfm.com/...l.aspx?ID=12788

No comments:
Post a Comment