காணாமல் போனோரை மீட்டுத்தருமாறு கோரி இன்று கடவுள் முன் தேங்காய் உடைத்து பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வசே கைதிகள் தினத்தை முன்னிட்டு காணாமற் போனோரை மீட்டுத்தரக் கோரி வவுனியாவில் 1008 தேங்காய்களை உடைக்கும் போராட்டமும் பிரார்த்தனையும் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரார்தனைப் போராட்டமும், தேங்காய் உடைக்கும் நிகழ்வும் வுவுனியா குருமங்காடு காளி கோவிலில் நடைபெற்றது.
கடந்த பல தசாப்தங்களாகவும், இறுதி யுத்த்தின் போதும் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் பல ஆயிரக்கணக்கானோரின் விடுதலையைக் கோரியும் அவர்கள் தொடர்பான தகவல் கோரியும் கடந்த பல வருடங்களாக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயினும் இன்னமும் அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் எந்த தீர்வும் அளிக்கப்படவில்லை. அண்மைக்காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தாக்கப்பட்டு ஊனமாக்கபட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர். இந்த நிலையில் ஜனநாயக வழியிலான போராட்டங்களும் தீவிரம் பெற்று வருகின்றன.
இந்த நிலையில் வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க நீதி வேண்டி ஆண்டவன் சந்நிதியில் 1008 தேங்காய்களை உடைக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
http://www.globaltam...IN/article.aspx
No comments:
Post a Comment