“மூவின மக்களுக்கும் நான் ஜனாதிபதி” என்று மஹிந்தர் அண்மையில் விடுத்த அறிவிப்பை புஸ்வானமாக்கியுள்ளது இலங்கை பொலிஸ்.
தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இந்து பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வருடாந்த வழிபாட்டு நிகழ்வுகளில் ஈடுபட ஆயத்தங்களை செய்த போது, வழிபாடுகளை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தம்புள்ள காளி அம்மன் கோயிலில் சுமார் 50 இந்து குடும்பங்கள் இவ்வாறு வழிபாடு செய்ய ஆயத்தமாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்த் திருவிழா நிகழ்வுகளை நடாத்த ஆயத்தமாகிய போது அதனை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் இந்தத் தேர்த் திருவிழாவிற்கு எதிர்ப்பை வெளியிட்டதாகவும் இதனால் தேர்த் திருவிழாவை நடத்த வேண்டாம் எனவும் இந்து பக்தர்களுக்கு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தேர்த்த் திருவிழா நடத்தப்பட்டால் உங்களது பாதுகாப்பிற்கு நாம் பொறுப்பில்லை என காவல்துறையினர் தம்மிடம் கூறியதாக இந்து பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment