Translate

Tuesday, 11 September 2012

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான டெசோ தீர்மானங்கள் பிரணாப்பிடம் கையளிப்பு

மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தமிழர் பிரச்சினைகள் தொடர்பான டெசோ மாநாட்டின் தீர்மான அறிக்கையின் பிரதியொன்று இந்திய ஜனாதிபதியிடம் அக்கட்சியினரால் கையளிக்கப்பட்டுள்ளது.


தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மேற்படி தீர்மான அறிக்கையின் பிரதியைக் கையளித்துள்ளார்.

இது தொடர்பில் டி.ஆர்.பாலு தெரிவித்திருப்பதாவது,

திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுரையின் பேயரில், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேசினேன்.

20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, டெசோ மாநாடு சார்பில், கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி நடத்தப்பட்ட தமிழீழம் உரிமை பாதுகாப்பு மாநாடு விளைவுகள் பற்றி எடுத்துரைத்தேன்.

மேலும் நானும், மு.க.ஸ்டாலினும், அமெரிக்கா சென்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை நியூயோர்க்கில் சந்தித்து பேசுவது குறித்தும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளரையும் சந்தித்து பேசும் திட்டம் குறித்தும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் எடுத்துரைத்தேன்.

இதனையடுத்து டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கையளித்தேன்' என்று அவர் மேலும் கூறியுள்ளார். (தற்ஸ்தமிழ்)

http://www.tamilmirr...1-06-12-45.html 

No comments:

Post a Comment