பிள்ளையானை வீழ்த்த நினைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மட்டக்களப்பு மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விடுத்துள் அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை எந்த விதத்திலாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை எந்த விதத்திலாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.
அப்படியிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகப்படியான வாக்குளைப் பெற்று முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் வெற்றி பெற்றுள்ளார். இவரை வெற்றி பெறச் செய்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தோடு கிழக்கு மாகாணத்திலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவினை நல்கிய அனைவருக்கும் அத்தோடு கிழக்கு மாகாணத்திலே வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் தமிழ் அ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்; சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ச.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. அதே வேளை தொடர்ந்து இதே போன்று பல இடர்பாடுகளை ஏற்படுத்த காத்திருக்கின்ற இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் கிழக்கு மக்கள் கடும் அவதானமாக இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்
No comments:
Post a Comment