Translate

Tuesday, 25 September 2012

கிழக்கு மாகாணத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தல்; அஸாத் சாலி அதிரடி

கிழக்கு மாகாணத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தல்; அஸாத் சாலி அதிரடி
news
கிழக்கு மாகாணத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தலாகும். அவரால் இனிமேல் கண்டியில் அல்ல, அம்பாறையிலும் போட்டியிட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தில் பதவிவகிக்கக் கூடாது ௭ன்ற சிறந்த கொள்கையை இந்த அரசாங்கம் முறையாக அமுல்படுத்தினால், ராஜபக்ச குடும்பத்தில் ௭த்தனை பேர் மிஞ்சுவர் ௭ன்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது ௭ன்று தனக்கு அறிவுறுத்தியதை அடுத்தே அமைச்சர் ௭ஸ்.௭ம். சந்திரசேன தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

அவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சு பதவி வகிக்க முடியாது என்றால் சபாநாயகர் சமல் ராஜபக்ச பதவி விலகினால் ௭த்தனை பேர் பதவி விலக வேண்டும்.

கிழக்குத் தேர்தலில் நான் ஒரு வீட்டுக்கேனும் செல்லாது வாக்குகளை பெற்றேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு நேரமிருக்கின்றது. தாமதிக்காமல் கிழக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி பிழையை திருத்திக்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தலாகும். அவரால் இனிமேல் கண்டியில் அல்ல  அம்பாறையிலும் போட்டியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment