இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக
இலங்கை மருத்துவரும், சமூகவியலாளருமான பிரையன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இலங்கை, ஈழம் மனித உரிமைகள் எனும் தொணிப்பொருளுடனான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத்தகவல்களை கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இலங்கை, ஈழம் மனித உரிமைகள் எனும் தொணிப்பொருளுடனான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத்தகவல்களை கூறியுள்ளார்.
வி.புலிகளை முற்றாக அழித்த பின்னரும், புலிகள் மீண்டும் வருவார்கள். ஆயுத போராட்டம் இன்னமும் நடைபெறுகிறது. புலிகள் தம்மை அழிக்க கூடும். தமது குடும்பத்துக்கு இதனால் பல ஆபத்துக்கள் வரவுள்ளன என கோத்தபாய அடிக்கடி கூறிவருவதாகவும், இது பற்றி யார் உரையாடினாலும் உடனடியாக ஆத்திரமடைந்து தனிமைக்கு சென்று யோசிக்க தொடங்கிவிடுவதாகவும் அவரது பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பிரையன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் போது தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்றதனால் இம்மனநிலை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என அவரது குடும்ப நண்பர் ஒருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் கோத்தபாய, இராணுவத்தினரை தொடர்ந்து பலப்படுத்தி வருவதற்கும், வான்படை, கடற்படையை தொடர்ந்து பலமுள்ள படையாக வைத்திருப்பதற்கு அவர் முனைவதற்கும் இம்மன நோயே காரணம் என பிரையன் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment