Translate

Thursday, 13 September 2012

பணம் தருகிறோம் எங்களுடன் வாருங்கள்- அலைந்து திரியும் மகிந்த கூட்டம்


பணம் தருகிறோம் எங்களுடன் வாருங்கள்- அலைந்து திரியும் மகிந்த கூட்டம்

பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி, தம்முடன் இணையுமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனக்கு அழுத்தம் கொடுப்பதாக திருமலையிலிருந்து ஐ.தே.க. சார்பாக கிழக்கு மாகாண சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இம்ரான் மஹ்ரூப் குற்றம் சுமத்தினார்.

ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின் அலுவலகத்திலிருந்து வருகிறோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கோடிக்கணக்கான பணம் வசதிகள் சலுகைகள் என பல தருகிறோம் என கூறினார்கள் என இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இதை தான் நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
என்ன சலுகைகள் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தார்கள் எக்பதை இப்போதைக்கு பகிரங்கப்படுத்தப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  ’ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான எனது தந்தை ஏ.ஜி.எஸ் மஹ்ரூப் மேற்கொண்ட சேவைகளை கட்சி மாறாமல் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருந்து மேற்கொள்ளவுள்ளேன்’ என இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இந்த மாகாண சபை தேர்தலில் 10,045 வாக்குகளை பெற்று மாகாண சபை உறுப்பினராக இவர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு அலைந்து திரிந்த மகிந்த கூட்டம் அது கைகூடாத நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி மாகாணசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு அலைந்து திரிகிறது.

No comments:

Post a Comment