Translate

Thursday 13 September 2012

கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி குறித்து பிளேக் மகிழ்ச்சி – சுமந்திரன்


கிழக்கு மாகாணசபை தேர்தல் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி குறித்தும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை குறித்தும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தம்முடன் கலந்துரையாடினார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு சென்றிருக்கும் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், முதலாவதாக பிளேக் எடுத்துக் கொண்ட விடயமே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல்தான். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டார். அத்துடன் தற்போது கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமைகள் குறித்தும் அவர் கேட்டார். அதற்கு நாம் உரிய விளக்கங்களை வழங்கியுள்ளோம் என சுமந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசியலத் தீர்வு விடயம், வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம், தடுப்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் குறித்தும், காணாமல் போனோர் குறித்தும் அதிக கவணம் செலுத்தப்பட்டதுடன், இராணுவ ஆக்கிரமிப்பு, காணி சுவீகரிப்பு, மற்றும் இவற்றில் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் அதிலுள்ள குறைபாடுகள் குறித்தும் பிளேக்கிற்கு நாம் விளக்கமளித்துள்ளோம். என சுமந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment