மு.கா.முடிவில்தான் கூட்டமைப்பின் ஆட்சி; ஆளும் தரப்புக்கு இடமளிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன் எம்.பி. |
ஆளும்தரப்புக்கு இடமளிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன் எம்.பி.நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தனது இல்லத்தில் கிழக்கு மாகாண சபைக்கு மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 11 தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்புக்குப் போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்.
கிழக்கு தேர்தல் முடிவின் பின்னர் இராஜதந்திரிகள் சிலருடனும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் உரையாடியிருக்கின்றேன். தமிழ் மக்கள் தந்துள்ள ஜனநாயகத் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஜனநாயகத் தீர்ப்பை உதாசீனம் செய்யாது ஜனநாயக முடிவை மதித்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களிடம் நான் தெரிவித்தேன்.
கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். தவறுகள் இடம்பெறாது இருந்திருந்தால் 12 ஆவது இடங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே கிடைத்திருக்கும் என்றும் நான் இராஜதந்திரிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரிவித்தேன்.
முதல் காலப்பகுதியில் முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். எம் மக்களில் அதிகமானோர் முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்க வேண்டும் என்றும் மாகாண ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு ஆளும் தரப்புக்கு இடமளிக்கக்கூடாது என்றார்.
கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமனற் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 13 September 2012
மு.கா.முடிவில்தான் கூட்டமைப்பின் ஆட்சி; ஆளும் தரப்புக்கு இடமளிக்கக்கூடாது என்கிறார் சம்பந்தன் எம்.பி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment