பௌத்த பிதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முருங்கன்.
தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்கள் பல சிறீலங்கா அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலிற்குட்பட்டுக் கொண்டுள்ளது. இதில் நாம் முன்னரே சுட்டிக் காட்டியதுபோன்று மன்னார் முருங்கன் பகுதியில் ஒரு இந்து ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு ஒரு பெரும் பௌத்த ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமையாகும்.
சிங்களவர்கள் எவருமே வாழாத தமிழ் பிரதேசத்தில் ஏன் இவ்வாறு ஒரு புத்தர் சிலை என்றும் கோள்விக்கு மத்தியில் முருங்கன் காவல்துறை மையத்தினுள்ளும் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் பிரசேதத்தில் தற்போது பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன் வெள்ளை நிறத்திலான வர்ணம் பூசப்பட்டு பெரும் பௌத்த தலம் போன்று காட்சியளிக்கின்றது.
தமிழ் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் வளம்மிக்க பூமியான அதாவத அரிசிக் கிண்ணம் என அழைக்கப்படும் முருங்கன் இன்று ஆக்கிரமிப்பாள்களின் அடுத்த இலக்காகியுள்ளமை இதன் மூலம் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு இந்து ஆலயத்தை ஆக்கிரமித்து அதனுள் எவ்வித அனுமதியும் இன்றி ஒரு பெரும் பௌத்த ஆலயம் நிறுவப்பட்டு இந்து தமிழ் மக்களின் வழிபாட்டு சுதந்திரத்தை சிறீலங்கா அரசு மீறியுள்ளது, அத்று ஊக்கமளிக்கின்றது.
சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக பல பரிந்துரைகளை முன்வைக்கும் தொண்டு நிறுவனங்கள் இவ் விடயங்களை கண்டும் காணாது விடுவதுடன் இவ் தொடர் செயற்பாடுகள் தமிழ மக்களில் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மடு பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் ஆக்கிமிப்பாளர்களால் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பாரிய பௌத்த ஆலயம் மற்றும் யாத்திரிகர் விடுதி என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் முருங்கனில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது மன்னார் மாவட்டம் முழுவதையும் பௌத்த அடையாளங்கள் கொண்டதாக மாற்றி சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உள்ளாக்கும் அரச பயங்கரவாதத்தின் நோக்கத்தை வெளிக் கொண்டுவந்துள்ளது.
தமிழ் நாட்டில் ஆலய வழிபாட்டுக்கு சென்ற சிங்கள மக்களை தமிழ் உணர்வு சகோதரர்கள் வெளியேற்றியது தொடர்பில் கண்டனம் வெளியிடுபவர்கள் மற்றும் மதத்தையும் அரசியலையும் இணைக்க வேண்டம் எனக் கூக்குரல் இருபவர்கள் தாயகத்தில் நடக்கும் மத ஆக்கிரமிப்பு மற்றம் மதச் சுதந்திர மறுப்பு பற்றி வாய் திறக்காது இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது, மட்டுமன்றி தமிழ் மக்கள் மீது தற்பொது மென்போக்கை சிறீலங்கா இனவாதிகள் கடைப்பிடிப்பதான எண்ணிக் கொள்ளும் எண் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இவ் அடக்குமுறைகள் கண்டுக்கு புலப்படாது மறைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment