Translate

Monday, 3 September 2012

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல் தொடர்கிறது: சர்வதேச மனித உரிமை அமைப்பு புகார்

சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது அதில் கூறி இருப்பதாவது:- 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நடந்த மனித உரிமை மீறலுக்கு இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. 


சட்ட விரோதமாக தடுத்து வைத்தல், சித்ரவதை செய்தல், தடுத்து வைக்கப்பட்ட இடத்தில் கொல்லபடுதல், காணாமல் போக செய்தல் போன்றவற்றில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இத்தகைய குற்றங்களை செய்தவர்கள் மீண்டும் அதே குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். 

விடுதலைப்புலிகளுடன் போர் முடிவுக்கு வந்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் பயங்கரவாத தடை சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தி அத்து மீறல்களை செய்கிறார்கள். இதற்கு எதிரானவர்கள் மீது அடக்கு முறை கையாளப்படுகிறது. கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment