Translate

Tuesday, 11 September 2012

புதிய முதலமைச்சர்களின் பெயர் விபரங்கள் இன்று வெளியிடப்படும்


புதிய முதலமைச்சர்களின் பெயர் விபரங்கள் இன்று வெளியிடப்படும்
புதிய முதலமைச்சர்களின் பெயர் விபரங்கள் இன்று வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார குழுக் கூட்டத்தில் இந்தப் பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய முதலமைச்சர்கள் பற்றி தீர்மானம் எடுக்கப்படும்.
சேவை மூப்பு, அனுபவம், இன விகிதாசாரம், விருப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் முதலமைச்சர் தெரிவு நடைபெறும்.
கிழக்கு மாகாணசபையை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவளிக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

வெற்றி பெற்றோர் பற்றிய தகவல்கள் வர்த்தாமனியில் வெளியிடப்பட்டதன் பின்னர், மாகாண ஆளுனர்கள் ஆட்சி அமைக்குமாறு கோருவார்கள் என அமைச்சர் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment