Translate

Tuesday 11 September 2012

புலிகளின் 20 கோடி ரூபா பணத்தை இலங்கைப் பொலிசார் எவ்வாறு கைப்பற்றினர் ?

வவுனியா அச்சுபுரம் வாவிக்கு அருகாமையில் உள்ள பற்றைக் காடு ஒன்றினுள் மிகவும் நுற்பமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 20 கோடி ரூபா மற்றும் சில நகைகளை தாம் கண்டுபிடித்துள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னணி என்ன எனபது தொடர்பான சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. வவுனியா அச்சுபுரம் வாவிக்கு அருகாமையில், நேற்று முந்தினம் இரவு 2 நபர்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில், இரவில் பற்றையைத் தோண்டிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட இடத்துக்கு உடனடியாகப் பொலிசார் வந்ததாகவும் அதனைப் பார்த்த அந்த நபட்கள் அவ்விடத்தை விட்டு ஓடியதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. இத் தகவலானது பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹனவால் தெரிவிக்கப்பட்டவை.

ஆனால் இதற்கு அப்பாலும் ஒரு செய்தி கசிந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட அந்த 2 நபர்களும் சிலகாலமாக சிறையில் இருந்தவர்கள் என்றும், இவர்களுக்கிடையிலான நட்பு சிறையில் தான் ஆரம்பித்தது என்றும் சொல்லப்படுகிறது. இவர்களில் ஒரு நபருக்கே, பணம் இருக்கும் இடம் தெரியும் எனவும், இதனை அறிந்த மற்றைய நபர் அவர் விடுதலையான பின்னர், பணத்தை தோண்டி எடுக்க உதவியதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி அங்கே பொலிசார் வந்தார் என்று கேட்கிறீர்களா ? அங்கே தான் இருக்கிறது இலங்கை புலனாய்வுத் துறையின் திறமை. அவர்களே செட் பண்ணி ஒரு ஆளை இவரோடு பேசவிட்டு, நண்பர்களாக்கி, பின்னர் பணத்தை தோண்டி எடுக்கும் வேளையில் தமக்கு அறிவிக்குமாறும் கூறியுள்ளனராம். இதனை அறிந்திராதாம் மற்றைய நபர், தனது நண்பனை நம்பி ஏமாந்துபோயுள்ளார்.

இவ்விடத்தில் புலிகள் தான் பணத்தை புதத்தார்களா என்ற சந்தேகங்களும் இருப்பதாக மேலும் அறியப்படுகிறது. புலிகளின் நிர்வாகத் தலைநகராக கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தபோது, அங்கே செயல்பட்ட தமிழீழ வைப்பகத்தை புலிகள் பிறிதொரு இடத்துக்கு மாற்றினார்கள். இதன்போது பணக் கையாடல் நடந்திருக்கலாம் என்ற அச்சங்களும் நிலவுகிறது.

No comments:

Post a Comment