Translate

Tuesday 11 September 2012

தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் - தென் ஆபிரிக்கா.


தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் - தென் ஆபிரிக்கா.
தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென தென் ஆபிரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு தென் ஆபிரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு சர்வதேச விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணைகள் உள்நாட்டு ரீதியில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தென் ஆபிரிக்காவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் நம்பகத்தன்மையுடையதாக அமைய வேண்டியது மிகவும் அவசியமானது என தென் ஆபிரிக்காவின் சர்வதேச விவகார பிரதி அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் இப்ராஹிம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் நிலையானதும், காத்திரமானதுமான சமாதானத்தை எட்ட முடியும் என தென் ஆபிரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கூட்டாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகர முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment