Translate

Tuesday 11 September 2012

ராஜபக்சவின் வருகைக்கு எதிராக அணிதிரளும் தமிழக அரசியல் தலைவர்கள் !


இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சியில் அமைக்கப்படவுள்ள பௌத்த கல்வி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி இந்தியா செல்லவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான குரல்கள் தமிழக அரசியல் தலைவர்களிடையே ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது சிறிலங்கா அரசுத் தலைவரது இந்திய வருகை;கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
மதிமுக கட்சியின் பொதுச் செயலர் வைகோ அவர்கள் இவ்விவகாரம் குறித்து வெளியட்டுள்ள
அறிக்கையில் சிறிலங்கா அரசுத் தலைவர் இந்தியா வரும் போது அவருக்கு எதிராக மத்திய பிரதேச மாநிலத்தில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தும் மதிமுக போராட்டம் நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரியும், ஈழத்தமிழர்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள யஷ்வந்த்சின்கா போன்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும் மகிந்த ராஜபக்சவை புத்தர் விழாவுக்கு அழைக்கும் முடிவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன் எனவும் வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பா.மா.க நிறுவனர் ராமதாஸ் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் தமிழ்ப்பெண்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் பாலியில் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்தும்படி ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இம்மாதம் 10ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 21வது கூட்டத்திலும் இதுகுறித்து பிரச்சினை எழுப்பி சிறிலங்காவை உலக நாடுகள் கண்டிக்கவும், எச்சரிக்கவும் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இவ்வாறு மகிந்த ராஜபக்சவின் இந்திய பயணத்திற்கு எதிராக மெதுமெதுவாக எழுந்து வரும் எதிர்குரல்கள் அடுத்து வரும் நாட்களில் தீவிரமடையும் எனத் தமிழக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment