தமிழர்களின் இன்றைய பயணம் மிகவும் முக்கியமான கட்டத்தில் நிற்கின்றது. சர்வதேச மயப்பட்ட எமது இனத்தின் பிரச்சினை பிராந்திய ஒழுங்கிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றுள்ளது.
எமது மண்ணில் தாக்கத்தைச் செலுத்தக் கூடிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்.
கைதடி கலைநகர் துர்க்கா சனசமூக நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா அண்மையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஈழத்தமிழர் விடயத்தில் தமிழகத்திலும் இனிவரும் காலங்களில் மிக முக்கியமான முனைப்புகள் வெளிப்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இவை எம்மோடு பிணைந்தவையாகவே இருப்பதால் எமது கொள்கை, இலட்சியம், சமூக ஒற்றுமை என்பனவும் எமது தீர்வு நோக்கிய பாதைக்கு முக்கியமாகத் தென்படுகின்றன. நாம் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல் இருப்பது இனிவரும் நாள்களுக்கு பலமான ஒன்று. என்றார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதேச மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கணினி ஒன்றை சனசமூக நிலையத்துக்கு கையளித்தார்.
சனசமூக நிலையத் தலைவர் மு.தங்கராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராசா, கூட்டமைப்பின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக சாவகச்சேரி
No comments:
Post a Comment