Translate

Tuesday, 23 October 2012

"13'ஐ நீக்குமாறு வலியுறுத்தும் போது தெரிவுக்குழுவில் எப்படி இணைவது? தமிழ்க் கூட்டமைப்பு கேள்வி

news
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தும் போது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைவது என்று இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

 
13 ஆம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகிறது. இந்தியாவும் இத னையே வலியுறுத்துகிறது.
 
இந்த நிலையில் அரசின் பல்வேறு உறுப்பினர்கள் இதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்ஸ போன்றோர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் 19 அரச உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் 12 உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். இதிலும் அரசே பெரும்பான்மை வகிக்கிறது.
 
இவ்வாறான ஒரு குழுவில் அரசின் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைவதில் சாத்தியம் இல்லை என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தீர்வுத் திட்டத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்திருக்கிறது எனவும், கடந்த ஒரு வருடமாக அரசின் தீர்வுத் திட்டத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு கோருகின்றபோதும், அதனை இன்னும் அரசு வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாது போவதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment