சர்வதேசத்தின் பலத்தைக் கண்டு இலங்கை தற்போதுதான் பயப்பட ஆரம்பித்துள்ளது என இலங்கைக்கான கனேடிய நாடாளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது காணமற் போனவர்களிற்கான பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் உள்ள அழுத்தத்தை அது இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது.
கனடா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேச நாடுகளோடு இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும்.
வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும், தமிழர்கள் சம பிரஜைகளாக வாழக்கூடிய வழியேற்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்களில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை தாங்கள் மீளாய்வு செய்யப் போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் கனடாவிற்கு திருப்தியான முடிவு ஏற்படாதபட்சத்தில் கனடியப் பிரதமர், இலங்கையில் அடுத்தவருடம் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை மீளாய்வு செய்யமாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
கனடிய மனிதவுரிமை மையத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
குளோபல் தமிழ்

No comments:
Post a Comment