Translate

Monday, 26 November 2012

ஈழத் தேசிய மாவீரர் தினத்தை பக்தியுடனும் பயனுடனும் அனுட்டிப்போம்:

News Service
அன்பான ஈழத்தின் உடன்பிறப்புக்களே சகோதர சகோதரிகளே
ஈழத் தமிழர் எங்கிருந்தாலும் ஒன்றாக ஒருங்கிணைந்து உலகளாவிய ரீதியில் அனுசரிக்கும் ஓர் தேசிய தினமாக மாவீரர் நாள் வளர்ந்து விட்டது. அன்றைய தினத்தை ஓர் புனித நாளாகக் கணி;த்து முதலில் ஆண்டவனை வழிபடுவோம். அவனின்றி அணுவும் அசையாது. எம்மை ஈழத்தமிழராக அந்த இடத்தில் இனாமான கொடைகள் - மொழி கலை கலாச்சாரம் - கொடுத்து இருத்தியவர் அவரே. கடந்த ஆறு தசாப்தங்களாக அனுபவித்த சகலத்தையும் முழுமையாக அறிந்தவரும் அவரே. ஆகையினால் எமது தாகத்தையும் சோகத்தையும் எமது இன்றைய முயற்சிகளையும் அவன் பாதத்திலே வைப்போம்.

இத்தினத்தின் நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் மனித பெலவீனத்தினால் சில பொறுப்பற்ற அல்லது சுயநல நோக்கங்களுக்காக இவற்றை ஒழுங்கு செய்யாதும் எமக்குள் போட்டி பொறாமைகள் நிறைந்த போக்கினால் மாசு படுத்தாமலும் காப்பாற்றுவது எல்லோரினதும் தலையான கடமையாகும்.
தாயகத்தில் மறைந்த மாவீரர்களின் கல்லறைகளையும் நினைவுச் சின்னங்களையும் மண்ணோடு மண்ணாய் அழித்து அதன் மேல்; படையின் அரக்கத்தன அதிகாரக் கட்டடங்களையும் வெற்றிச்சின்னங்களையும் பதித்து எம் மாவீரர்களையும் தமிழ் மண்ணையும் மக்களையும் சிங்கள அரசு வேரோடு அழிக்க முயல்கின்றது. ஆனால் எமது விடுதலைத் தாகத்தையோ சோகத்தையோ ஒருவராலும் அழித்து விட முடியாது.
இருந்தும் புலத்தில் எமது விடுதலைப் போராட்டத்தை இங்கு செயற்படும் தீய சக்திகள் இலேசாகச் சிதைக்கலாம். விழிப்பாயிருப்பதும் போராட்டத்தை விறுவிறுப்பாகத் துரிதப்படுத்துவதும் எம்மில் தான் தங்கியிருக்கிறது. புலம் பெயர்ந்து வாழும் நாம் இத்தினத்தையிட்டு; மூன்று விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென நாம் விரும்புகிறோம்.
உகந்த தகுந்த முறையில் இப் புனித நாளை அனுட்டிப்பது. இதன் பயனாக மக்கள் சக்தியைப் பெருக்கி சர்வதேசத்தின் கவன ஈர்ப்பை சம்பாதிக்க வேண்டும். தற்போது முக்கியத்துவம் பெற்றிருக்கும் சர்வதேசத்துடனான போராட்டத்தில் எமது பங்கு எனது பங்கு என்ன என்பதை உணர்ந்து செயற்பட முன் வர வேண்டும்.
உகந்த தகுந்த முறையில் மாவீரர் தினத்தை அனுட்டிப்பதெப்படி?
மக்கள் சக்தியைப் பெருக்குவதெப்படி? சர்வ தேசத்தின் கவன ஈர்ப்பை பெறுவதெப்படி?
சர்வதேச ரீதியில் முன் எடுக்கவேண்டிய முயற்சிகளுக்கு எமது அல்லது எனது பங்கென்ன?
இந்த மூன்று முக்கிய கேள்விகளையும் அன்பார்ந்த மக்களே உங்கள் மனச்சாட்சி முன் நிறுத்த விரும்புகின்றேன். உங்கள் நேர்மையான பதில்களை வைத்து நீங்களே உங்களை மதிப்பிடுங்கள் உங்கள் மனதை மாற்றுங்கள் உரிய செயலில் ஈடுபட முன் வாருங்கள்.
எமது சுய விமர்சனத்திற்கு ஏதுவாக சில கருத்துகளை நான் சகோதர உரிமையுடன் இங்கே தருகிறேன் -
புலத்தில் நினைவு தினங்கள்
தமிழ் தேசிய நினைவு தினங்களை புதிய வடிவத்திலே நடாத்த தேவையிருப்பின் அவைகளைப் பற்றி பண்புடன் உரையாடித் தீர்த்துக் கொள்ளுவோம். ஒரு பரந்த நாட்டில் எப்போதும் ஒரே இடத்தில் தான் நினைவு நாட்கள் வைக்க வேண்டிய கடமை இல்லை. மக்கள் தொகையாக வாழும் இடத்தையும் தூரங்களையும் கணக்கிலெடுத்து புரிந்துணர்வுடனும் தாராள மனப்பான்மையுடனும் தீர்மானிப்போம்.
மக்கள் சக்தியையும் சர்வ தேச கவன ஈர்ப்பையும் திரட்டுவதெப்படி?
மக்களே எமது இலட்சிய தாகத்தின் ஊற்று மக்கள் சக்தியே போராட்டத்தின் அடித்தளம். இவ்வடித்தளம் தொகையிலும் வகையிலும் பெருகவேண்டுமாயின் ஒருவரை ஒருவர் பகைக்காதீர் "துரோகி" போன்ற பட்டங்களை அள்ளி வீசாதீர். எல்லோரையும் அரவணைக்க தயாராகுங்கள். இயலாவிட்டால் மௌனம்
எமது சர்வதேச போராட்டம்; விரிவடைய தமிழரல்லாத உங்கள் சினேகிதனுக்கும் அயலவனுக்கும் இத் தினத்தைப் பற்றி கூறுங்கள். எங்கள் போராட்ட சரித்திரத்தையும் உங்கள் தாக சோகங்களையும் கூறி அவர்களையும் நாள் நிகழ்வுக்கு வரவழையுங்கள்.
சர்வ தேச முயற்சிகளில் எமது அல்லது எனது பங்கென்ன? மக்கள் சக்தியுடன் உரிய மட்டத்திலும் இடங்களிலும்�� நம்பிக்கைக்குரிய தமிழ் பிரதிநிதிகள் தான் செயற்பட முடியும். எல்லோரும் இப் பணிகளை செய்ய முடியாது. சிலருக்குத்தான் உரிமையும் தகுதியும் இருக்கின்றது.
ஆகையினால் மக்களுக்கிடையிலும் அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்க்கு மிடையில் பரஸ்பர நம்பிக்கையும் பொறுப்பும் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் துரொகம் செய்யாது பொறுப்பான அளவிற்கும் இரகசியம் காப்பாற்றி உரிய முறையில் நடப்பவையிட்டு தகவல்கள் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இதில் என்னுடைய இடமெங்கே பொறுப்பென்ன? ஏதாவது தமிழ் அமைப்பில் இணைந்திருக்கிறேனா? பொறுப்பிருக்கா? எனது நேரத்திலும் திறமைகளிலும் பணத்திலும் என்ன விதமாகப் பங்களிக்கின்றேன்? இவ் வினாக்களுக்கு விடை தேடுங்கள். ஆண்டி மடம் கட்டியது போல அமர்ந்திருந்து எல்லாவற்றையும் விமர்சிக்காது எழுந்து செயற்படுங்கள்.
அன்பார்ந்த மக்களே எனது உடன் பிறப்புக்களே! நினைவு தினங்கள் திரும்பத் திரும்ப வந்து போகும். அவற்றை நாம் அனுட்டிப்பதும் தொடரும் போராட்டத்திற்கு இன்றைய நிலையில் சக்தி திரட்டி எம் மத்தியில் இயங்கும் அமைப்புகளின் தலைவர்களை ஊக்குவித்து உதவுவதும் உங்கள் கடமை.
மேற் கூறிய சிந்தனைகளை சகோதர உரிமையுடன் உங்கள் முன் வைத்து மாவீரரின் தாகமும் தற் பருத்தியாகமும் நம்மிலும் வளர்க வாழ்த்துகிறேன்.
பணியாளன் எஸ். ஜே. இம்மானுவேல் ஜேர்மனி

No comments:

Post a Comment