Translate

Monday, 26 November 2012

ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் தீர்வு இன்றேல் சாகும்வரை உண்ணாவிரதம்: - செல்வம் அடைக்கலநாதன்

News Service
தமிழர் தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கிலுள்ள தமிழர்களின் சுதந்திரத்துக்காக தன் உயிரைத் தியாகம் செய்ய தயங்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு மக்கள் பலவிதமான போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று தெரிவித்த அடைக்கலநாதன் எம்.பி, வடக்கில் நடடைபெற்ற யுத்தத்தின்போது தான் மயிரிழையில் உயிர்த்தப்பியதாகவும் சிவசக்தி ஆனந்தன் மற்றும் முருகேசு சந்திரகுமார் எம்.பி.க்களும் இதேபோன்ற அனுபவத்தினைப் பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment