பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின் மூலம் தமிழ் மாணவர்களை இராணுவ முகாமுக்கு கொண்டு செல்வது சமூகத்தில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என ஜே.வி.பி எச்சரிக்கின்றது.
இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் சுயமாக சிந்திக்கும் சமுதாயத்தினரை தமது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு திட்டமாகவே இது அமைந்துள்ளதாகவும் எனவே பெற்றோர் தமது பிள்ளைகளை இந்த பயிற்சிக்கு அனுப்பகூடாது என பத்தரமுல்லையில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க வேண்டுகோள்விடுத்தார்.
இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் சுயமாக சிந்திக்கும் சமுதாயத்தினரை தமது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு திட்டமாகவே இது அமைந்துள்ளதாகவும் எனவே பெற்றோர் தமது பிள்ளைகளை இந்த பயிற்சிக்கு அனுப்பகூடாது என பத்தரமுல்லையில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க வேண்டுகோள்விடுத்தார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் என்ன? அவற்றை தயாரித்தது யார்? அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்ன? பல்கலைகழக பாடமொன்றை தேர்ச்சிபெற்ற பேராசிரியர்கள் விரிவரையாளர்களே தயார் செய்கின்றனர். உயர்தரம் வரை அதற்கு பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களே பாடத்திட்டங்களை தயாரிக்கின்றன. தலைமைத்துவ பயற்சியான இதனை தயாரித்தது யார்? தலைமைத்துவ பயிற்சி, அரசியல் தொடர்பான பார்வை, நாட்டின் எதிர்கால பார்வை, இதன்மூலம் கூற முனைவது என்ன? மஹிந்த சிந்தனையை படிப்பிக்கவே முனைகின்றனர்.
நாட்டின் எதிர்கால பார்வை என்று இதனை படிப்பிக்க முனைகின்றனர். அந்த பிள்ளைகள் மீது அரசியலை சுமத்தி, இராணுவ அழுத்தத்தின் கீழ் அடிபணியவைத்து அவர்கள் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக சுயமாக சிந்திப்பதை தடுக்கவே இதனை செய்கின்றனர். எஸ்.பி.திசாநாயக்கவுக்கு தேவையான, எதற்கும் அசைந்துகொடுக்கும் மாணவர்களை உருவாக்கும் ஒரு திட்டமே இதுவாகும்.
இலங்கையின் கல்வித்துறையில் இதுவொரு வீழ்ச்சியை நோக்கியே கொண்டு செல்லும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. எனவே உடனடியாக இதனை நிறுத்த வேண்டும். ஒருபிள்ளையை கூட இந்த பயிற்சிகளுக்கு அனுப்ப வேண்டாம் என நாம் பெற்றோர்களிடம் வேண்டுகோள்விடுக்கின்றோம். அனுப்பவில்லை என்றால் அதற்கு எதிராக எஸ்பி.திநாநாயக்கவினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.
மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்பதற்கு சட்டங்கள் இல்லை. பல்கலைக்கழகத்திற்கு செல்ல முன்னர் அவ்வாறானதொரு பாடத்திட்டத்தை பயிலவேண்டும் என்று எந்தவொரு சட்டமும் கிடையாது. தமது பிள்ளைகள் திறந்த மனதுடன் எதனையாவது சிந்திக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைப்பார்களாயின் இந்த பாடத்திட்டத்துக்கு தமது பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என கோருகின்றோம். தலைமைத்துவ பயிற்றி பாடத்திட்டத்துக்கு பல்லைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இந்த பாடநெறி தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ் பிள்ளையொன்று எவ்வாறு இராணுவ முகாமில் வாழும் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். யுத்தகாலங்களில் இராணுவத்தினர் தொடர்பாக தமிழ் பிள்ளைகள் மத்தியில் எந்தவிதமான எண்ணம் இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கு பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது தமது பிரதேசங்களில் யுத்தத்துக்கு தலைமைத்துவம் கொடுத்தவர்கள் இராணுவத்தினர் என்ற எண்ணமே அவர்களுக்கு உள்ளது. சரியோ தவறோ அந்த பிள்ளைகளுக்கு இராணுவத்தினர் தொடர்பாக அவ்வாறனொரு எண்ணமே உள்ளது. எந்த எண்ணம் நல்லதல்ல அது மாற்றமடைய வேண்டிய ஒன்றுதான். அந்த பிள்ளைகளை கொண்டுபோய் இராணுவ முகாமில் வைத்தால், தமிழ் பிள்ளைகளுக்கு என்ன நினைவு வரும்? முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கும் தனக்கும் இடையில் என்ன வித்தியாசம் உள்ளதென்று தோன்றுமே?
எனவே, இந்த தலைமைத்துவ பயிற்சியானது பல சமுக பிரச்சினைகளை தோற்றுவிக்கும். கல்வித்துறையில் பாதிப்பை ஏற்படுத்தும். தமக்கு தேவையானவர்களை உருவாக்கிக்கொள்வதற்காக இராணுவத்தினரை பயன்படுத்தும் முயற்சியே இதுவாகும். இதனை ஒருபோதும் செய்யக்கூடாது என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடு என அனுரகுமார திசநாயக்கா தெரிவித்தார்.
No comments:
Post a Comment