வடக்கு – கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அரசாங்கம் நியமிக்குமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையிலிருந்துவிலகிக்கொள்ளும் என கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு உருப்படியாக எதையும் செய்யப்போவதில்லை என்றும் இது காலத்தை வீணே போக்குகின்ற ஒரு முயற்சி என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். முன்னைய அரசாங்கங்களின் கீழ் அமைந்த பல்வேறு குழுக்களின் இறுதி அறிக்கைகள், சிபாரிசுகள் என்பன நிறைய உள்ளன. இவை இனப்பிரச்சினை தீர்வுக்கு வழிகாட்டல்களாக அமைந்துள்ளன. அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வில் உண்மையான அக்கறையுடையதாயின் இவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும் என பிரேமசந்திரன் கூறினார்............... read more
No comments:
Post a Comment